அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள் 2 மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். மேலும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் அவ்வாறு செய்ய சதி செய்து வந்தது தெரியவந்துள்ளது.
22 மற்றும் 21 வயதுடைய இந்த பெற்றோரின் தொலைபேசிகளில் சிறார் ஆபாசப் படங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக மாடிசன் போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், அவர்கள் தங்கள் 2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருத்தல் மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சதி செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.