போர்க்காலத்தில் ஆஸ்திரேலியாவைப் பாதுகாத்த வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
சில கடைகள் அன்சாக் தினத்தன்று திறந்திருக்கும், மற்றவை நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு அன்சாக் தினத்தன்று நியூ சவுத் வேல்ஸில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மதுபானக் கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விக்டோரியா மற்றும் வடக்குப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மதியம் 1 மணிக்குப் பிறகு திறந்திருக்கும்.