புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் குறைந்தது 250,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போப்பிற்கு அஞ்சலி செலுத்த வாடிகன் நகரத்திற்கு வந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், பல வெளிநாட்டுத் தலைவர்களும் போப்பிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வர உள்ளனர்.
அதன்படி, சர் கெய்ர் ஸ்டார்மர், டொனால்ட் டிரம்ப், வேல்ஸ் இளவரசர் மற்றும் உலகின் மிகப்பெரிய கத்தோலிக்க மக்கள்தொகை கொண்ட பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உட்பட பல உலகத் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், சனிக்கிழமை இறுதிச் சடங்கு வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.