Newsபடிப்படியாக சரியும் Tesla - ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவாரா மஸ்க்?

படிப்படியாக சரியும் Tesla – ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவாரா மஸ்க்?

-

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘Dodge’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.

அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், Tesla நிறுவன தலைவருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான ‘டாட்ஜ்’ துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து 12 லட்ச டொலர்கள் வரை குறைக்கப்பட்டது.

இதற்கிடையே, ட்ரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய Tesla நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 சதவீதம் வரை டெஸ்லாவின் லாபம் குறைந்தது.

இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் Dodge துறைக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார்.

அடுத்த மாதத்துக்குள் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறி விடுவேன் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

Latest news

தேசியக் கட்சித் தலைவரின் கோரிக்கைகளுக்கு உடன்படும் தொழிற்கட்சி

Nationals-இன் 4 கொள்கை கோரிக்கைகளுக்கு லிபரல் கட்சி ஒப்புக்கொண்டதன் மூலம் நீண்டகால அரசியல் கூட்டணி புதுப்பிக்கப்பட்டுள்ளது. Nationals தலைவர் David Littleproud 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி...

வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்துள்ள Harvard பல்கலைக்கழகம்

Harvard பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அதன்படி, தற்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் அல்லது...

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்பம்

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு உலக அளவில் முன்னணி ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இப்போது ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. அங்கு, ரோபோ ஒரு...

வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்துள்ள Harvard பல்கலைக்கழகம்

Harvard பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அதன்படி, தற்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் அல்லது...