இந்தியாவில் டெல்லி-ஜம்மு காஷ்மீர் படுகொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர அதிகாரிகள் நாட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.