மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு Hot air பலூன் விபத்துக்குள்ளாகும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அந்த நேரத்தில் குறித்த பலூனில் பத்து பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வீடியோவில் ஒரு வணிக கட்டிடத்தின் அருகே பலூன் மோதி விபத்துக்குள்ளாவதும் காட்டப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த Hot air பலூன் விமானிக்கு 30 வருட அனுபவம் உள்ளது, இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், விக்டோரியா பாதுகாப்பு நடவடிக்கை கட்டளை சம்பவ இடத்தில் கூடி விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.