அமெரிக்காவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பகிரங்கமாகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலரான 41 வயதான Virginia Giuffre தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) நடந்ததாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் டியூக் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்காக Giuffre சர்வதேச அளவில் பிரபலமானார்.
இருப்பினும், இளவரசர் ஆண்ட்ரூ இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.
கூடுதலாக, குழந்தை பாலியல் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அமெரிக்கரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதும் Giuffre பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவரது மரணம் குறித்து வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், வாழ்நாள் முழுவதும் பாலியல் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தால் அவர் அனுபவித்த துன்பங்கள் அவரை தற்கொலைக்கு இட்டுச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.