குயின்ஸ்லாந்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Sunshine Coast-இல் ஒரு பெண்ணும், Burpengary-இல் மற்றொரு பெண்ணும் இந்த விபத்துகளை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மழைப்பொழிவு 151 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், நாள் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.