ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
அது இரண்டாம் உலகப் போரில் வெற்றி தினத்தை முன்னிட்டு மே 8 முதல் 10 வரை அமுல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கைக்கும் வழிவகுக்கும் என்று கூறுகிறது.
இந்த போர் நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் தொடங்கி மே 10 வரை நீடிக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
புதின் முன்னதாக 30 மணி நேர ஒருதலைப்பட்ச ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்த போதிலும், ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றையொன்று குறிவைத்து நீண்ட தூர தாக்குதல்களை நடத்தியுள்ளன.