2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மேற்கு பசிபிக் பிராந்திய மாநாட்டை (International Diabetes Federation Western Pacific Region Congress 2026) நடத்தும் பெருமை மெல்பேர்ண் நகருக்கு கிடைத்துள்ளது.
இந்த மாநாடு 2026 ஆகஸ்ட் 18 முதல் 21 வரை மெல்பேர்ண் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் என்று சுற்றுலா அமைச்சர் ஸ்டீவ் டிமோபௌலோஸ் அறிவித்தார்.
2,500க்கும் மேற்பட்ட சர்வதேச நீரிழிவு நிபுணர்களும், நீரிழிவு நோயாளிகள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டை நடத்துவது மெல்பேர்ணை மருத்துவ ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மையமாக மேலும் நிலைநிறுத்தும்.
மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சுமார் 206 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பிராந்தியத்தின் சுகாதார அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.