ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலையில் பயணித்த லாரியின் உலோகத் துண்டுகள் சாலையில் வீசப்பட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்களின் டயர்கள் சேதமடைந்துள்ளன.
இதன் விளைவாக நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் உள்ள வயோங் சாலையிலிருந்து Mount White வரை தெற்கு நோக்கிச் செல்லும் M1 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சேதமடைந்த டயர்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான கார்கள் சாலையின் ஓரத்தில் நிறுத்தி, அவற்றின் டயர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வாகனங்கள் பழைய பசிபிக் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் அந்த சாலையில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலைமை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்று நெடுஞ்சாலைத் துறை தலைமை ஆய்வாளர் தாமஸ் பார்ன்ஸ் கூறினார்.
விபத்துக்குக் காரணமான NJ Ashton லாரி நிறுவனத்தின் உரிமையாளர், லாரியின் பின்புறத்திலிருந்து உலோகத் துண்டுகள் வெளியே வீசப்படுவதை ஓட்டுநர் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும், விபத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் கூறுகிறார்.