மெல்பேர்ண் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு உதவுவதற்காக நின்ற ஒரு பெண்ணின் கார் திருடப்பட்டுள்ளது.
காலை 6:15 மணியளவில் Glenferrie சாலையில் ஒரு Toyota Prius கார் சாலைத் தடுப்பில் மோதியது. அவருக்குப் பின்னால் வந்த 33 வயது பெண் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக காரை நிறுத்தினார்.
அப்போது விபத்துக்குள்ளான காரில் இருந்த ஐந்து இளைஞர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கி, அவரது நீல நிற Toyota Sedan-ஐ எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
லேசான காயங்களுக்கு ஆளான அந்தப் பெண் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய Toyota Prius சில நாட்களுக்கு முன்பு Point Cook-இல் திருடப்பட்ட வாகனம் என்று விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து மேலும் ஏதேனும் தகவல்கள் இருந்தால் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.