Newsபூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

-

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் டைமர் கோளாறு காரணமாக இது வெள்ளி கிரகத்திற்கு போகாமல் பூமியை சுற்ற தொடங்கியது. எவ்வளவோ முயன்றும். வெள்ளி கிரகத்திற்கு இந்த விண்கலத்தை அனுப்ப முடியவில்லை. சுமார் 50 ஆண்டுகளுக்கும மேலாக பூமியை சுற்றி வரும் இந்த விண்கலம் தற்போது பூமியில் விழுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மே 8 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இது பூமியின் மீது மோதும். வழக்கமாக பூமியின் வளிமண்டலத்தில் எந்த பொருள் நுழைந்தாலும் அது எரிந்த சாம்பலாகிவிடும். ஆனால் காஸ்மோஸ் 482 எனும் விண்கலத்தின் அவ்வாறு எரியாது.

மாறாக அப்படியே முழுதாக வந்து விழும் என்பதால் இது தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 453 KG எடை கொண்ட இது மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பூமியில் விழ இருக்கிறது. இது விழுந்த இடத்தில் கட்டிடங்கள் இருந்தால் தரைமட்டம் ஆகிவிடும். காடு இருந்தால் காட்டுத்தீ ஏற்படும். கடலில் விழுந்தால் ஆபத்து குறைவு என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வடக்கு 52 டிகிரி கோணத்தில் தொடங்கி, தெற்கு 52 டிகிரி கோணத்தில் இந்த விண்கலம் விழும். என தெரிவிக்கப்படுகிறது.

அதாவது,

நியூயோர்க் – அமெரிக்கா

லண்டன் – இங்கிலாந்து

பாரீஸ் – பிரான்ஸ்

டோக்கியோ – ஜப்பான்

பெய்ஜிங் – சீனா

சிட்னி – அவுஸ்திரேலியா

சான்டியாகோ – சிலி

ஜோஹன்பர்க் – தென்னாப்பிரிக்கா

இந்த நகரங்களுக்கு அருகில் விண்கலம் விழலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

வார இறுதியில் விக்டோரியாவில் பனிப்புயல் ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஒரு பெரிய பனிப்புயல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய பனிப்புயலாக இது...

ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 1.9% இலிருந்து 2.8% ஆக...

கிழக்கு கடற்கரையிலிருந்து ஐரோப்பாவிற்கு விரைவில் விமானங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான Qantas, நிகர லாபத்தில் 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் $2.4 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் வருவாய்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...