பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற குவாண்டாஸ் விமானம் அவசரநிலை காரணமாக மாலைத்தீவில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.35 மணிக்கு பெர்த் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட QF9 விமானம், சுமார் எட்டு மணி நேரம் பறந்த பிறகு திருப்பி விடப்பட்டது.
17 மணி நேரமும், 45 நிமிடங்களும் கொண்ட இந்த நேரடி விமானம் பொதுவாக இந்தியப் பெருங்கடல், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பயணித்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடையும்.
ஆனால், ஒரு பயணி சம்பந்தப்பட்ட விபத்து காரணமாக, போயிங் 787 விமானம் மாலைதீவின் தலைநகரான மாலேயில் இரவு 11.30 மணியளவில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டது.