மெல்பேர்ண் விமான நிலையத்திற்கு அருகில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இதற்காக தீயணைப்பு குழுக்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காட்டுத்தீயால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும், விக்டோரியா அவசர சேவைகள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றன.
அத்தியாவசிய சேவைகளுக்காக சாலையை அடைக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும், மெல்பேர்ண் விமான நிலைய பிரதிநிதி ஒருவர், விமானங்கள் வழக்கம் போல் இயங்குவதாகவும், தீ விபத்து விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை என்றும் கூறினார்.