பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆஸ்திரேலிய நகரங்களில் “What Were You Wearing?” என்ற அமைப்பு ஏராளமான போராட்டங்களை நடத்தியது.
இந்தப் போராட்டத்தில் அனைத்து வயது மக்களும் பங்கேற்றனர். மேலும் பிரிஸ்பேர்ண், மெல்பேர்ண் மற்றும் கான்பெரா நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறை காரணமாக கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்கள், படங்கள் மற்றும் கலைச் சித்தரிப்புகளை போராட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, வன்முறையைத் தடுக்க உதவும் நிறுவனங்களில் அரசாங்க முதலீட்டை அதிகரிக்கவும், புகார்களைக் கையாள பயிற்சி பெற்ற அதிகாரிகளை நியமிக்கவும் அவர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர் .