குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது.
இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின் தெற்கே இடம்பெற்றுள்ளது.
அந்தக் குழந்தை, காலை 11.40 மணியளவில் Vale View-இல் உள்ள Drayton Connection சாலை மற்றும் Luck சாலை சந்திப்பில் நீல நிற Ford Ranger மீது மோதிய தங்க நிற Subaru Outback-இல் பயணித்த பயணியாவார்.
அவர் Toowoomba அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவரது பலத்த காயங்களால் உயிரிழந்தார்.
Subaruவின் ஓட்டுநர், 64 வயதான உள்ளூர் பெண்மணி மற்றும் இரண்டாவது குழந்தை பயணி ஆகியோரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Ford Rangerன் ஓட்டுநர்,Spring Mountain-ஐ சேர்ந்த 19 வயது இளைஞன், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது வாகனத்தில் இருந்த 18 வயதுடைய இரண்டு பயணிகள் காயமின்றி தப்பினர்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் தொடர்புடைய CCTV காட்சிகளைக் கொண்ட எவரும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.