நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் ஒரு கப்பலை வழிமறித்து சோதனை செய்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஐந்து பேரை கைது செய்து, 623 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு டன்னுக்கும் அதிகமான கோகோயினை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த படகு வழிமறித்து சோதனை செய்யப்பட்டது.
ஏப்ரல் 28 ஆம் திகதி சிட்னியின் Sutherland Shire-இல் சந்தேகத்திற்கிடமான முறையில் 13m motor cruiser படகொன்று அதிக அளவில் பணத்துடன் வாங்கப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு துப்பறியும் நபர்கள் இந்த விசாரணையைத் தொடங்கினர்.
24 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆண்கள் படகில் கைது செய்யப்பட்டு Coffs துறைமுக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதே நேரத்தில், தென்மேற்கு ராக்ஸ் பகுதியை விட்டு வெளியேற முயன்ற இரண்டு வாகனங்களை புலனாய்வாளர்கள் தடுத்து நிறுத்திய பின்னர், 28, 29 மற்றும் 35 வயதுடைய மேலும் மூன்று ஆண்கள் கரையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் Taree காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.