டாஸ்மேனியாவின் Travellers Rest-இல் உள்ள Bass நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Devonport-ஐ சேர்ந்த 28 வயதுடைய நபர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மேற்கு நோக்கி பயணித்தMercedes Benz வாகனம் ஒன்றே இந்த விபத்துக்குக் காரணமாகும் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்திலேயே குறித்த பாதசாரி உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தைத் தொடர்ந்து Mercedes Benz காரின் ஓட்டுநர் போதைப்பொருள் மற்றும் மது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏதேனும் dashcam அல்லது CCTV காட்சிகளுடன் விபத்து விசாரணையை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.