தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றலுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் இணைந்து கலந்துகொண்டருந்தனர்.
இதேவேளை, மே மாதம் 18ஆம் நாளைத் தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.