மெல்பேர்ணின் தென்கிழக்கில் இன்று அதிகாலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மெல்பேர்ணின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதியான Clayton Southல் காலை 6 மணிக்கு சற்று முன்பு இந்த பயங்கரமான கார் விபத்து நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஒரு ஆண் மற்றும் பெண் ஓட்டுநரே குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர்கள் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
Westall சாலை மற்றும் Rosebank Avenue சந்திப்பில் குறித்த இரண்டு கார்களும் மோதிக்கொண்டன.
விபத்து நடந்த சூழ்நிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்துவதால், சந்திப்பு மூடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.