விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது.
Paradise நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேலும் இந்த சம்பவம் குறித்து அருகிலுள்ள சமூகத்தினர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.
Graffiti ஓவியத்தை அகற்றும் போது கல் சுவருக்கு மேலும் சேதம் ஏற்படக்கூடும் என்று சந்தேகிக்கும் உள்ளூர்வாசிகள், பொறுப்பான நபர்கள் காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து விக்டோரியா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை தெரிவித்துள்ளது.