ஒத்திவைக்கப்பட்ட IPL தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று BCCI நேற்று (மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் நடைபெறும் இடங்களாக பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடபெறும்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தீவிர போரால் ஒத்திவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 17 போட்டிகளும் 6 இடங்களில் நடத்தப்படும். மே 29 முதல் தகுதிச்சுற்று போட்டியும், மே 30 Knock-out போட்டியும், ஜூன் 1 அரையிறுதிச் சுற்று ஆட்டமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மசாலாவில் Punjab Kings – Delhi Capitals அணிகளுக்கு இடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.