நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander அறிவித்தார்.
3 மாத காலத்திற்குள் 42 நாய்கள் காயமடைந்ததை அடுத்து, பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் அதைப் புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனது நாய்கள் தனது குடும்பத்தில் ஒரு பகுதியாக இருப்பதையும், நாய்கள் ஆபத்தில் இருப்பதையும் விரும்பாததால் தான் இந்த முடிவை எடுத்ததாக Bundaberg greyhound தலைவர் Ricky Hazel தெரிவித்தார்.
இந்தத் துறை ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் $9.6 மில்லியனை பங்களிக்கிறது.
வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் மில்லியன் கணக்கான பொது நிதியை செலவழித்ததற்காக அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.