ஒரு தாய் தனது குழந்தைகளை தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குயின்ஸ்லாந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது .
குயின்ஸ்லாந்தின் டூவூம்பாவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது மூன்று குழந்தைகள் இறந்துள்ளனர் .
கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டபோது, ஏழு பேர் வீட்டிற்குள் இருந்தனர் .
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு ஒன்பது வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது .
குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 4 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த தீ விபத்தில் இரண்டு ஆண்களும் 11 வயது சிறுவனும் லேசான காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட பெண் பலத்த காயங்களுடன் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
அந்தப் பெண் மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள், மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு தீ வைப்பு குற்றச்சாட்டு ஆகியவற்றில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.