குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
“Too Good to Go“, வணிகங்கள் நாளின் இறுதியில் விற்கப்படாத பொருட்களை வெளியே எறிவதைத் தடுக்க இந்த செயலி பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மீதமான பொருட்களை ஒரு சிறிய விலையில் வாங்க முடியும். மேலும் நுகர்வோரின் பட்ஜெட்டுகளுக்கும் இது உதவுகிறது.
இந்த செயலி, ஏற்கனவே 600,000 ஆஸ்திரேலிய பயனர்களுடன், பிரபலமான interstate சேவையை நிரூபித்த பிறகு, தற்போது Sunshine State-இலும் வந்துள்ளது.
நல்ல உணவு குப்பைத் தொட்டியில் போகாமல் தடுப்பதே முக்கிய நோக்கமாகும்.
100க்கும் மேற்பட்ட குயின்ஸ்லாந்து கடைகள் ஏற்கனவே இந்த செயலியில் இணையத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வாரமும் அதிகமானோர் பதிவு செய்கிறார்கள்.
இந்த “Too Good to Go” செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.