மெல்பேர்ணில் உள்ள Yarra நகர சபை , Captain Cook நினைவுச்சின்னத்தை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்துள்ளது .
இது Edinburgh Gardens (Fitzroy) அமைந்துள்ளது. மேலும் இந்த நினைவு சின்னத்தில் நடபெறும் தொடர்ச்சியான நாசவேலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நகர சபை கூறியது .
கடைசியாக சில நாசகாரர்கள் சேதப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஜனவரி 28, 2024 முதல் அந்த நினைவுச்சின்னம் அந்த இடத்தில் இருந்து காணாமல் போனது.
இதை நிறுவுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் சுமார் $ 15,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது .
இது மீட்டெடுக்கப்பட்டால், அது மீண்டும் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாலும், செலவு தோல்வியடையும் என்று Yarra நகர சபை சுட்டிக்காட்டுகிறது .
இருப்பினும், நினைவுச்சின்னத்தை மீண்டும் கட்டும் திட்டத்தை ஏற்க Captain Cook சங்கம் விருப்பம் தெரிவித்திருந்தாலும், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.