Adelaideதெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

தெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

-

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை சுறா கடித்ததாக வந்த தகவலை அடுத்து, காலை 9:45 மணியளவில் Port Noarlunga jetty-இற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக SA காவல்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டு, துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

அந்த நபரின் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாக SA ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

ஏனைய நீச்சல் வீரர்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு மக்களை போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

Port Noarlunga அடிலெய்டிலிருந்து 40 நிமிடங்கள் தெற்கே உள்ளது. மேலும் இது நீச்சல், snorkelling மற்றும் டைவிங்கிற்கு பிரபலமான கடற்கரையாகும்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...