ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space அறிவித்துள்ளது.
ராக்கெட்டை ஏவுவதற்கு முந்தைய ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட தரை ஆதரவு அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாகவும், மேலும் சோதனை தேவை என்றும் நிறுவனம் அறிவித்தது.
இது வெற்றியடைந்தால், ஆஸ்திரேலியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் சுற்றுப்பாதையில் ஏவப்படும் என்ற பெருமையைப் பெறும்.
அதன்படி, சிக்கலான பொறியியல் சாதனையை அடையும் உலகின் 12வது நாடாக ஆஸ்திரேலியா மாறும்.
Gilmour Space-இன் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஆடம் கில்மோர் கூறுகையில், “இது ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றது போன்றது” என்றார்.