பள்ளி வளாகத்திற்குள் கார் மோதியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும், ஏராளமான குழந்தைகள் காயமடைந்ததாகவும் கூறப்படும் நிலையில், ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மெல்போர்னின் உள் கிழக்கில் உள்ள ஆபர்ன் தெற்கு தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, 40 வயது ஹாவ்தோர்ன் கிழக்குப் பெண் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த விபத்தில் 11 வயதான சிறுவன் ஒருவன், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு அங்கு அவர் இறந்தார்.
11 வயதுடைய இரண்டு சிறுமிகள், 10 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்தப் பெண் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகவும், மோட்டார் வாகனத்தை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் துப்பறியும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
அவர் ஜூலை 15 ஆம் திகதி மெல்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.