Newsநியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் மூவரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் மூவரை இடைநீக்க பரிந்துரை

-

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து, இளம் மவோரி எம்.பி ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பைக் காட்டினார்.

அப்போது, அவருடன் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு காணொளி வடிவில் இணையத்தில் மிகவும் வைரலாகிய நிலையில் பலரும் ஹனாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அரசு அமைத்த ஆணையம் பாராளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் எழுப்பிய மூன்று உறுப்பினர்களையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஹக்கா மற்றும் மவோரி பாரம்பரிய நடனங்களில் உறுப்பினர்கள் ஈடுபடுவது புதியதல்ல என்றாலும் அதற்கு சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டிய விதிமுறையுள்ளது.

இந்தப் பரிந்துரைக் குறித்து மவோரி கட்சி கூறுகையில், அந்நாட்டின் பாராளுமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் மிகவும் கடுமையானது என்றும் பழங்குடியின மக்கள் எதிர்த்தால், ஆதிக்க சக்திகள் அதிகப்படியான தண்டனையையே விதிப்பார்கள் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய எச்சரிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த இடைநீக்கம் பரிந்துரைக் குறித்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஆளும் பழமைவாத கூட்டணி அரசின் ஆதரவினால் இடைநீக்கம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள Australia Post

Australia Post ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள்Australia Post இருந்து வரும் தொடர்ச்சியான மோசடி மின்னஞ்சல்களைப் பற்றியது. தவறான அஞ்சல் குறியீடு காரணமாக...

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பு விகிதத்தில் திடீர் அதிகரிப்பு

தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகமான ஆஸ்திரேலியர்கள் பணியில் இணைந்துள்ளமையால், ஆண்டின் மென்மையான தொடக்கத்தை சரிசெய்கிறது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆஸ்திரேலியாவில் வேலை தேடும் 20,000 பேர்...

மெல்பேர்ண் தொடக்கப்பள்ளியில் மோதிய கார் – சிறுவன் மரணம்

பள்ளி வளாகத்திற்குள் கார் மோதியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும், ஏராளமான குழந்தைகள் காயமடைந்ததாகவும் கூறப்படும் நிலையில், ஒரு பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மெல்போர்னின் உள்...