பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு வரை போராடியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில், பிரிஸ்பேர்ணில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் தொலைவில் உள்ள வாரெகோ நெடுஞ்சாலையில் உள்ள மவுண்ட் கிராஸ்பி பாலத்தில் குறித்த வாகனம் மோதியது. 5.5 மீட்டர் மேம்பாலத்தின் கீழ் சிக்கியதால், கான்கிரீட் துண்டுகள் கழன்று விழுந்தன.
லாரி போலீஸ் பாதுகாப்பில் இருந்ததாகவும், ஆனால் ஓட்டுநர் பைலட் வாகனத்தைப் பின்தொடரத் தவறிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.