NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரு வாகனத்தில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் இருந்த இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
60 வயதுடைய ஒரு ஆணும், 70 வயதுடைய ஒரு பெண்ணும் பலத்த காயங்களுடன் கான்பெர்ரா மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த வாரம் Eden பகுதியில் நடந்த இரண்டாவது உயிரிழப்பு விபத்து இதுவாகும்.