Richmond பள்ளத்தாக்கில் உள்ள Summerville சூரிய மின் உற்பத்தி பண்ணைக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
இதன் மூலம் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Rappville-இல் நிறுவப்படவுள்ள $ 312 மில்லியன் திட்டமான இந்த ஆலை , சுமார் 36,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
இந்தப் பகுதிக்கு முன்மொழியப்பட்ட மூன்று பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற இரண்டு இன்னும் திட்டமிடல் நிலைகளில் உள்ளன.
இந்த திட்டம் சுமார் 200 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையம், ஆலையைச் சுற்றி 10 மீட்டர் பாதுகாப்பு எல்லையை நிறுவுதல் மற்றும் உள்ளூர் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை எடுப்பது போன்ற சட்டப்பூர்வ நிபந்தனைகளின் கீழ் கட்டப்பட உள்ளது.