நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை Warrego நெடுஞ்சாலையில் வடக்கு Tivoliயில் உள்ள Mount Crosby சாலை பாலத்தின் கீழ் காற்றாலை விசையாழி பகுதி சிக்கிக்கொண்டது.
குறித்த காற்றாலை விசையாழியின் பகுதி ஒரே இரவில் அகற்றப்பட்டது. ஆனால் Ipswich குடியிருப்பாளர்கள் மேம்பாலம் குறைந்தது ஒரு வருடமாவது செயல்படாமல் போகக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.
Warrego நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய பாதை மூடப்பட்டிருக்கும், கிழக்கு நோக்கிய பாதை திறந்திருக்கும், ஆனால் மேம்பாலம் விரைவில் மூடப்படும்.
இந்த விபத்து Ipswich குடியிருப்பாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, தென்கிழக்கு குயின்ஸ்லாந்து வழியாக வரும் எந்தவொரு சரக்கு நிறுவனங்களுக்கும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.