ஆஸ்திரேலியாவில் இருசக்கர ஓட்டுநருடன் ஏற்பட்ட மோதலில் இளம் பெண் காவலர் ஸ்க்ரூடிரைவரால் குத்தப்பட்டார்.
தென் கிழக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாகா வாகா பகுதியில், 31 வயதுடைய நபர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனை கவனித்த இளம் பெண் காவலர் அவரை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் பெண் காவலரை தாக்கியுள்ளார்.
அவர் ஸ்க்ரூடிரைவரை வைத்து காவலரின் தலை, கை மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
உடனே அப்பகுதிக்கு துணை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான பெண் காவலர் சிகிச்சை பெற்றார்.
பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது விரல்களில் எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு, வாகா வாகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.