நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள் சேதமடைந்ததை அடுத்து, ஓட்டுநர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மே 2 திகதி Wyong சாலைக்கும் Mount White-இற்கும் இடையிலான M1 பசிபிக் மோட்டார் பாதையில் ஒரு லாறியில் இருந்து கசிந்த உலோகத்துண்டுகளே இந்த விபத்துக்கு காரணமாகும்.
கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்குப் பிறகு பிரதான சாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பல வாகனங்களில் டயர்களும் சேதமடைந்து, பழுதுபார்க்கும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் எந்த காயங்களும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.
சம்பவம் நடந்த நாளில், டிரெய்லரை இழுத்துச் சென்ற கனரக வாகன டிப்பர் வாகனத்தின் ஓட்டுநரிடம் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.