இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast பகுதிகளுக்கு பலத்த மழை மற்றும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சிட்னியிலும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Newcastle-இல் வடக்கே உள்ள பகுதிகளில் 180 மில்லிமீட்டர் வரையிலான தாக்கத்தை சமாளிக்கத் தயாராகி வருவதாக NSW மாநில அவசர சேவை (SES) தெரிவித்துள்ளது.
Hunter பகுதியை உள்ளடக்கிய பகுதியில் பலத்த காற்று மற்றும் ஆபத்தான அலைகள் பற்றி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரத்தில் 50 முதல் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும், 24 மணி நேரத்தில் 180 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சராசரியாக மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.