இன்று காலை சிட்னி CBD- யில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் பல மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் .
காலை 9.45 மணியளவில் Saint Andrew’s Cathedral பள்ளிக்கு ஒரு நபர் பள்ளியின் ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும், பின்னர் வளாகத்திற்குத் திரும்பியதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பள்ளி கட்டிடம் பூட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் பள்ளி வளாகத்தில் அந்த நபர் காணப்படவில்லை.
பின்னர், Surry Hills-ல் உள்ள ஒரு ஹோட்டலில் 46 வயது நபர் ஒருவர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியேற மறுப்பதாகவும் வந்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு அழைக்கப்பட்டனர்.
மதியம் 12 மணியளவில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். குறித்த நபரே பள்ளியில் நடந்த சம்பவத்துடன் தொடர்பிடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
அந்த நபர் சர்ரி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.