மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பொலிஸாரிடம் முறைபாடு ஒன்றையும் பதிசெய்துள்ளார்.
இதுகுறித்து விக்டோரியன் தடயவியல் குழந்தை மருத்துவ சேவையின் துணை இயக்குநரான தடயவியல் மருத்துவர் ஜோனா டல்லியிடம் கேட்டபோது, “கடந்த பத்தாண்டுகளில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் போக்கையே கொண்டுள்ளது” என்றார்.
சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்தும் தனிப்பட்ட பயனர்களும், குழந்தைகளின் பெற்றோரும் அதிக விழிப்புணர்வு மற்றும் Online Dating உலகம் எவ்வாறு தொடர்ந்து விரைவாக மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தங்கள் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகில் முதன்முறையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் Dating app தயாரிப்பாளர்களுக்கான புதிய நடத்தை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தன்னார்வ நடவடிக்கை, ஆனாலும் இது அவர்களின் பயனர்களை உன்னிப்பாகக் கண்காணித்து புகாரளிப்பதை எளிதாக்கும்.
“இணைய தளத்தில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் அளவைப் பொறுத்தவரை, 21 ஆம் நூற்றாண்டின் கிட்டத்தட்ட இரண்டாவது உலகளாவிய தொற்றுநோயை நாம் இங்கு எதிர்கொள்கிறோம்” என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.