சிட்னியில் நடந்ததாகக் கூறப்படும் வீட்டு வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு தாய் உயிருக்குப் போராடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Redfern-இல் உள்ள அவரது வீட்டிற்குள், 47 வயதான Lauren Hopkins என்பவரை அவரது மகன் Mitchell Hopkins (30 வயது) என்பவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறித்த தாயாரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mitchell Hopkins மீது வேண்டுமென்றே கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாக தாயார் வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து, குற்றவாளியான மகன் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.