கடந்த ஆம் ஆண்டு Carnarvon Canyon கடலிலிருந்து விஞ்ஞானிகளால் ஒரு அரிய வகை Flapjack ஆக்டபஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் வரை அதற்கு பெயரிடப்படவில்லை.
இது Carnarvon Flapjack Octopus என பெயரிடப்பட்டு கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இது பெரிய கண்கள் மற்றும் இரத்தச் சிவப்பு விழுதுகளைக் கொண்ட ஒரு சிறிய ஜெலட்டினஸ் ஆழ்கடல் உயிரினமாகும்.
இந்த ஆக்டபஸ் சுமார் நான்கு சென்டிமீட்டர் வரை மட்டுமே வளரும், ஆனால் அதன் உடலை ஒரு பான்கேக் – அல்லது அதன் பெயர் குறிப்பிடுவது போல ஒரு Flapjack வடிவத்தில் தட்டையாக்கும் தனித்துவமான திறனை கொண்டது. இதன் தலையின் மேற்புறத்தில் ஒரு ஜோடி துடுப்புகளைக் கொண்டுள்ளது, அவை சிறிய யானை காதுகளை போன்றன மற்றும் நீச்சலுக்கு உதவுகின்றன.
அவை இனப்பெருக்கம் செய்து மெதுவாக வளரும். ஆனால், மற்ற ஆக்டபஸ்களைப் போல மை உற்பத்தி செய்யவோ அல்லது அவற்றின் நிறத்தை மாற்றவோ முடியாது.
மங்கலான வெளிச்சம் கொண்ட கடல் தளத்தில் 1,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வாழும். Carnarvon Flapjackகளின் பெரிய கண்கள் புழுக்கள் மற்றும் சிறிய ஓட்டுமீன்களைப் பிடிக்க உதவி செய்கின்றன என விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்தனர்.