யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது.
17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை தாங்குகிறார்.
குயின்ஸ்லாந்து பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி, சமூகத்திற்கும் தற்போது அரசு பராமரிப்பில் உள்ள 12,500 குழந்தைகளுக்கும் அமைப்பை சீர்திருத்துவதற்கு இந்த விசாரணை மிகவும் முக்கியமானது என்றார்.
இந்த மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு உடைந்திருப்பதும், இளைஞர் குற்ற நெருக்கடியும் இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், இரண்டையும் நிவர்த்தி செய்ய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
2024 குழந்தை பராமரிப்பு கணக்கெடுப்பின்படி, பராமரிப்பில் உள்ள குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தங்கள் மன ஆரோக்கியத்தை ஆதரிக்க வேண்டிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் காணப்படும் தகவல்களின்படி, 40 சதவீதம் பேர் கண்டறியப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், 44 சதவீதம் பேர் தற்போது அல்லது கடந்த காலத்தில் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 22 சதவீதம் பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.