NSW இன் சில பகுதிகள் தொடர்ந்து கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதால், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.
பல பகுதிகளில் கனமழை மற்றும் கடுமையான காற்று வீசுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு NSW SES எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தின் வடக்கின் பெரும்பகுதிகளில் மழை பெய்ததால், திங்கட்கிழமை நியூகேஸில் விமான நிலையத்தில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மத்திய வடக்கு கடற்கரை, மத்திய கடற்கரை மற்றும் ஹண்டர் பகுதிகளில் வெள்ளம் காரணமாக 31 மாநில பள்ளிகளும் நான்கு சுயாதீன பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்படும் என்று NSW கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று NSW SES தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ கிரிப் தெரிவித்தார்.