ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில், இஸ்ரேலியக் கொடியில் பதிக்கப்பட்ட நாஜி சின்னம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ணில் நடந்த “நக்பா” பேரணியில் நாஜி சின்னம் கொண்ட ஒரு பலகை காணப்பட்டது. இது நாஜி சின்னங்களை பொது காட்சிக்கு தடை செய்யும் மாநில சட்டங்களை வெளிப்படையாக அவமதிக்கும் செயலாகும்.
இஸ்ரேலியக் கொடியின் மீது சிவப்பு நிற ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டுள்ளது, அதன் மேல் பகுதியில் “சியோனிசம்” என்றும் கீழே “நாசிசம்” என்றும் எழுதப்பட்டுள்ளது.
சுவரொட்டியை ஏந்தியிருப்பவர் ஒரு ஜாக்கெட், தொப்பி மற்றும் Keffiyeh scarf அணிந்துள்ளார். இது இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன எதிர்ப்பின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னமாகும்.
1930கள் மற்றும் 1940களில் ஐரோப்பாவில் ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் போர் இயந்திரத்தையும் உள்ளடக்கிய நாஜி சின்னங்களைக் காட்சிப்படுத்துவதை விக்டோரியா தடை செய்துள்ளது.
குறித்த செயல் தொடர்பில் மாநில நூலகத்தில் காணப்பட்ட “ஒரு தாக்குதல் அடையாளத்தை” விசாரித்து வருவதாக விக்டோரியன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினர்.