மெல்பேர்ணின் பிரபலமான Peter Stevens Motorcycles, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மூட முடிவு செய்துள்ளது.
1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு Ringwood, Dandenong, Geelong மற்றும் அடிலெய்டு ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்ட இந்த வணிகம், அதன் கதவுகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த வணிகம் தற்போது Jessica Chiodo-Reidy என்பவரால் இயக்கப்படுகிறது. இதற்கிடையில், KordaMentha வணிகத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 வாரங்களில் வணிகம் மூடப்படும் என்றும் ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வணிகம் மூடப்படுவதால் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.