வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு NSW LGAக்களில் வசிப்பவர்கள் மத்திய அரசின் பேரிடர் மீட்பு கொடுப்பனவைப் பெறுவார்கள் என மத்திய அரசு இன்று தெரிவித்தது.
Kempsey, Port Macquarie, Dungog மற்றும் Mid Coast Council-இல் வசிப்பவர்கள் 13 வார அவசரகால கொடுப்பனவுகளை அணுக முடியும் என்று அவசரகால மேலாண்மை அமைச்சர் கிறிஸ்டி மெக்பெய்ன் தெரிவித்தார்.
NSW மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்படும் போது வேலை செய்ய முடியாதவர்களுக்கு இழந்த சம்பளத்தை ஈடுகட்ட இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
மத்திய மற்றும் NSW அரசாங்கங்கள் ஏற்கனவே 16 LGAக்களுக்கான பேரிடர் மீட்பு நிதி ஏற்பாடுகளைச் செயல்படுத்தியிருந்தன.
இந்த உதவித்தொகை சர்வீசஸ் ஆஸ்திரேலியா மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் பகுதியில் மேலும் 100 மிமீ மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.