அடிலெய்டின் வடகிழக்கில் பாதையைக் கடக்க முயன்ற ஒரு இளம் பெண் மீது காரொன்று மோதி, சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
ஒரு கணம் கவனக்குறைவு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒரு தாயும் மகளும் விளக்குகளுக்கு எதிராகக் கடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மகளின் கவனயீனத்தால் அவள் எதிரே வந்த வாகனத்தில் மோதுண்டு ஐந்து மீட்டர் தூக்கி வீசப்பட்டாள்.
குறித்த பெண்ணின் உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினாள்.
இந்த ஆண்டு இதுவரை தெற்கு ஆஸ்திரேலிய சாலைகளில் ஏழு பாதசாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 37 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.