சிட்னியின் மேற்கில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு, ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 11.30 மணியளவில் Cabramatta-ல் உள்ள Angelina Crescent-ல் உள்ள ஒரு வீட்டிற்கு தாக்குதல் நடந்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் குறித்த இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
வீட்டில் கழுத்து, கை, கால்களில் காயங்களுடன் 51 வயது பெண் ஒருவரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு, Liverpool மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணுக்குத் தெரிந்த 59 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மனநல மதிப்பீட்டிற்காக Bankstown மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.
தாக்கப்பட்ட பெண்ணை கொலை செய்யும் நோக்கத்துடன் கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாக குறித்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வீட்டு வன்முறை தொடர்பான தற்காலிக கைது உத்தரவுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று நடைபெறும் விசாரணையின் மூலம் அவர் Parramatta உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.