மெல்பேர்ணில் ஒரு வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லாங்வாரினில் உள்ள லிப்பார்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் ட்ரிப்பிள் ஜீரோவிற்கு அழைத்ததை அடுத்து, அதிகாலை 2.10 மணியளவில் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
குறித்த வீட்டிலிருந்து மூன்று பேர் காயமின்றி தப்பினர்.
50 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களுக்கு சம்பவ இடத்திலேயே துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், முறையாக அடையாளம் காணப்படாத நான்காவது நபர் பின்புற வீட்டிற்க்குள் இறந்து கிடந்தார்.
இன்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.